Publish Date: Mon, 31 Mar 2008 (20:59 IST)
Updated Date: Mon, 31 Mar 2008 (20:59 IST)
இந்திய - சீன உறவிற்கு பங்கம் ஏற்படுத்திவிட வேண்டாம் என்று தலாய் லாமாவிற்கு அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
மராட்டிய மாநிலம் ஒளரங்காபாத்தில் தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லாரியை துவக்கிவைத்துப் பேசிய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, “திபெத்தின் மதத் தலைவர் தலாய் லாமாவை மதிக்கிறேன். அவர் நமது நாட்டின் விருந்தினர். அதே நேரத்தில் நமது அண்டை நாட்டுடன் நாம் கொண்டுள்ள உறவை பாதிக்கக்கூடிய எதையும் நம்மால் அனுமதிக்க முடியாது” என்று பேசினார்.