ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தீவிரவாதி ஒருவனைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
தன்னிச்சையாக இயங்கும் திறமையுடைய அவன் பெயர் ரயீஷ் அகமது என்ற கச்சூ என்றும், புல்வாமாவில் நேற்றிரவு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் அவன் கைது செய்யப்பட்டான் என்றும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் கச்சூவிடம் இருந்து சில ஆயுதங்களும் வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.