Publish Date: Sun, 30 Mar 2008 (15:14 IST)
Updated Date: Sun, 30 Mar 2008 (15:14 IST)
தோடா சிறையில் இருந்து அண்மையில் தப்பிய லஸ்கர் இ தாயிபா இயக்கத் தீவிரவாதி கைது செய்யப்பட்டான்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து தோடா மாவட்டத்தில் உள்ள பதேர்வா நகரத்திற்கு போதைப் பொருட்கள், வெடி பொருட்கள் உள்ளிட்டவற்றைக் கடத்திக் கொண்டிருந்த அப்துல் காதிர் என்ற லஷ்கர் இ தாயிபா இயக்கத் தீவிரவாதியைக் கடந்த மார்ச் மாதம் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
தோடா மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்துல் காதிர் அண்மையில் தப்பினான். இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் இருவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஜம்முவில் பதுங்கியிருந்த அப்துல் காதிரை பாதுகாப்புப் படையினர் இன்று கைது செய்தனர்.