இந்தியாவில் சவால்கள் நிறைந்துள்ள போதிலும், உலகப் பொருளாதாரத்தில் முத்திரை பதிப்பதற்கான சிறந்த காலம் வர உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
டெல்லியில் அயல்நாட்டு பத்திரிக்கையாளர்களுடனான சந்திப்பின்போது பிரதமர் கூறுகையில், "100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ள இந்தியாவில் அனைத்து சமுதாய தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகிறது. வெளிப்படையான சமுதாயம், அரசாங்கத்தால் இந்தியா பெருமை கொள்கிறது.
அதிக மக்கள் தொகையை இந்தியா கொண்டிருப்பதால் பெரும்பாலான சவால்களை எதிர்கொள்கின்ற போதிலும், மனித உரிமை, சட்ட மதிப்பு காக்கப்படுகிறது.
உலக பொருளாதாரத்தில் முத்திரை பதிக்க முயலும் இந்தியாவுக்கு அதற்குரிய சிறந்த காலம் வர இருக்கிறது. அடுத்த 50 ஆண்டுகளில் அதிக வளர்ச்சியை பெற இருக்கிறோம்" என்றார்.