புதுச்சேரியில் புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார்.
2008-09 ஆம் ஆண்டுக்கான மொத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடாக ரூ.3,333.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், திட்ட ஒதுக்கீடு ரூ.1,750 கோடி. திட்டம் சாரா ஒதுக்கீடு ரூ.1,553.40 கோடி. இதில் மத்திய அரசின் ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு செய்யப்பட்டுள்ள ஒதுக்கீடு ரூ.29.84 கோடி உள்ளடங்கும்.
2008-09 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் மானியம் ரூ.703.05 கோடி ஆகும். வெவ்வேறு ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட கடன் ரூ. 1,225.79 கோடி. எஞ்சியுள்ள ரூ.1,404.40 கோடி சொந்த நிதி ஆதாரங்கள் ஆகும்.
தொழிற்சாலைகள் ஒவ்வொரு ஊரகத் தொகுதியிலும் 2 முதல் 5 ஏக்கர் பரப்பளவில் உள்கட்டமைப்பு வசதிகளுடன் சிறிய அளவு தொழிற்சாலைகளுக்கான தொழிற்பேட்டைகளை உருவாக்குவதற்கு பிஐபிடிஐசி உத்தேசித்துள்ளது.