Publish Date: Thu, 27 Mar 2008 (14:23 IST)
Updated Date: Thu, 27 Mar 2008 (14:22 IST)
தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் (சிமி) தலைவர் சப்தர் நகோரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் 10 பேர் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கைது செய்யப்பட்டனர்.
மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக சிமி இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தூரில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் ரகசியக் கூட்டம் நடத்திய சிமி இயக்கத்தினரை சுற்றி வளைத்த சிறப்பு அதிரடிப் படையினர், அங்கிருந்த 10 பேரைக் கைது செய்தனர்.
இதில், சிமி இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் சப்தர் நகோரி, குபிலி ஆகியோரும் அடக்கம். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 7 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.