அஸ்ஸாமில் இரயில் நிலையம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு இரயில்வே ஊழியர்கள் உள்பட 4 பேர் பலியாயினர்.
தெற்கு அஸ்ஸாமின் வடக்கு கச்சர் மலை மாவட்டத்தில் உள்ள ஹரங்காஜோவ் இரயில் நிலையத்தில் நேற்று இரவு திமா ஹலம் டோகா (ஜே) என்றும் 'கறுப்பு விதவை' என்றும் அழைக்கப்படும் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்க்சி சூடு நடத்தினர். அதே நேரத்தில் வெடிகுண்டு வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலில் இரண்டு இரயில்வே ஊழியர்களும், அதிகாரிகள் இரண்டு பேரும் கொல்லப்பட்டனர். இரண்டு பேர் காயமடைந்தனர். இதில் பலியானவர்கள் பெயர் கேசப் மலகர், மசப் பாளைபிஜோய் தாஸ், சக்ரபோர்த்தி என தெரிய வந்துள்ளது. தப்பி ஓடிய தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.