பிரிட்டன் இளம்பெண் ஸ்கார்லெட் மரணம் தொடர்பான வழக்கை மத்தியப் புலனாய்வுக் கழகத்திடம் வழங்குவதற்கு கோவா அரசு முடிவு செய்துள்ளது.
கோவா சட்டப் பேரவையில், நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று (திங்கள்கிழமை) மாலை அம்மாநில முதல்வர் திகாம்பெர் காமெத் இதை அறிவித்தார்.
இதன்மூலம், ஸ்கார்லெட் மரணத்தில் காவல்துறையினர் நடத்தும் விசாரணையில் எழுந்துள்ள சந்தேகங்கள் விலகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தனது மகளின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் காவலர்கள் உண்மைகளை மூடி மறைப்பதாகவும், இதனால் இவ்வழக்கில் ம.பு.க. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஸ்கார்லெட்டின் தாய் ஃபியோனா மேக்வோன் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்குற்றச்சாற்றை மறுத்த முதல்வர் காமெத், "இந்த வழக்கில் எதையும் மறைப்பதற்கு காவல்துறையினர் முயலவில்லை" என்றார்.