Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகமயமாக்கலால் எல்லோருக்கும் பலனில்லை : உச்ச நீதிமன்ற நீதிபதி!

உலகமயமாக்கலால் எல்லோருக்கும் பலனில்லை : உச்ச நீதிமன்ற நீதிபதி!
, திங்கள், 24 மார்ச் 2008 (18:44 IST)
உலகமயமாக்கல் கொள்கையால் வளர்ந்த நாடுகள் மற்றும் வளர்ச்சியடையும் நாடுகளில் வாழும் பெரும்பான்மையான மக்கள் பயனடையவில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஆந்திர மாநில மாநாட்டை நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி சென்ற வெள்ளிக்கிழமையன்று துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது :

உலகமயமாக்க‌ல் கொள்கையால் வளரும் நாடுகளிலும், வளர்ச்சியுற்ற நாடுகளில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை.

உலகமயமாக்க‌ல் (தாராளமய பொருளாதார கொள்கை) கொள்கையால் சில நாடுகளின் உள்நாட்டு மொத்த உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆனால் இந்த நாடுகளிலும் கூட பெரும்பான்மையான மக்கள் பயனடையவில்லை.
இந்த கொள்கையால் நாடுகள்தான் பணக்கார நாடுகளாக மாறியுள்ளன. ஆனால் மக்கள் ஏழைகளாகவே உள்ளனர், பல வளர்ச்சியுற்ற நாடுகளில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறியுள்ளனர். அந்த நாடுகளில் வாழும் ஏழைகள் அவர்களின் உடைமைகளை கூட பாதுகாத்து கொள்ளமுடியவில்லை.

உலக தொழிலாளர் அமைப்பு 73 நாடுகளில் உலகமயமாக்கலால் ஏற்பட்ட சமூக மாற்றம் பற்றி நடத்திய ஆய்வு அறிக்கையை மேற்கோள் காட்டி நீதிபதி. பி.சுதர்சன் ரெட்டி பேசுகையில், இந்த நாடுகளில் உலக மொத்த மக்கள் தொகையில் 59 விழுக்காட்டினர் வாழ்கின்றனர். இவர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகிறது. ஐந்து சதவதித்தினரே முன்னேறி வருகின்றனர். இந்த ஏற்றத்தாழ்வு நியாயமாக ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல, அத்துடன் அரசியல் ரீதியாக ஆபத்தானது.

உலகமயமாக்கல் கொள்கைகள் தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கே சாதகமாக உள்ளது. சமீபத்தில் செய்துள்ள மாற்றங்களால் ஏழை நாடுகள் அதிக அளவு பாதிப்பிற்குள்ளாகும்.

இந்த உலக மயமாக்கல் கொள்கையால் சுற்றுச் சூழல், வாழ்நிலை போன்ற பிற நல்ல அம்சங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு பணம் ஒன்றே பிரதானமாக ஆக்கப்படுகிறது. இதனால் பல நாடுகள் ஜனநாயக ரீதியாக சொந்த மக்களுக்கு நன்மை ஏற்படும் முடிவுகளை எடுக்க முடியாமல் போகின்றது. இதனால் அவற்றின் இறையான்மை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலகமயமாக்கலின் ஆதரவாளர்கள், இதனால் ஒவ்வொருவருக்கும் பொருளாதார ரீதியாக பயன் பெறுவதாக பிரச்சாரம் செய்கின்றனர். இதற்கு மாறாக வளரும் நாடுகளிலும், வளர்ச்சியடைந்த நாடுகளிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. உலகமயமாக்கல் என்றால் பொருளாதார கொள்கைகளிலும், கலாச்சார ரீதியாகவும் அமெரிக்கமயமாவதல்ல. ஆனால் இதுதான் நடக்கிறது. இதனால் பதட்டம் உருவாகின்றது என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil