Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6-வது ஊதியக் குழுவின் அறிக்கை தாக்கல்: 40 விழுக்காடு ஊதிய உயர்வு!

6-வது ஊதியக் குழுவின் அறிக்கை தாக்கல்: 40 விழுக்காடு ஊதிய உயர்வு!
, திங்கள், 24 மார்ச் 2008 (18:41 IST)
மத்திய அரசின் 40 லட்சம் ஊழியர்களின் ஊதிய உயர்வு, சலுகைகளை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட ஆறாவது ஊதியக் குழு தனது அறிக்கையை இன்று மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

அதில் 40 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் கடந்த 2006-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த ஊதியக் குழு தனது அறிக்கையை நிதி அமைச்சர் ப. சிதம்பரத்திடம் இன்று அளித்தது. இந்த அறிக்கையின்படி, மத்திய அரசு ஊழியர்களின் மாத ஊதியம் 40 விழுக்காடு உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.6,660 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு ரூ.30 ஆயிரமாக இருந்த அமைச்சரவை செயலர்களுக்கான மாத ஊதியம் ரூ.90 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செயலர்களுக்கான மாத ஊதியம் ரூ.80 ஆயிரமாக நிர்ணயித்துள்ளது. அதற்கேட்ப, இதரபடிகளையும் உயர்த்த பரிந்துரைத்துள்ளது.

தனிநபர், குடும்ப ஓய்வூதியத்தை 40 விழுக்காடு அளவுக்கு உயர்த்தவும் இந்த குழு பரிந்துரைத்துள்ளது. மாதம் ரூ.26 ஆயிரத்திற்கும் குறைவான ஊதியம் பெறுபவர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகமாதத்திற்கு ரூ.50 லிருந்து ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கபொருந்தும். விடுதிக்கான உதவித்தொகை மாதத்திற்கு ரூ.300 லிருந்து ரூ.3 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் இறக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கான ஓய்வூதியத்தொகை அதிகரிக்கப்பட்விகிதத்தில் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இயலாதவர்களுக்கான ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வரை 5 மடங்கஅதிகரிக்கப்படுகிறது.

இந்த அறிக்கையின்படி, மத்திய அரசு இந்தாண்டில் ரூ.12 ஆயிரத்து 561 கோடி ஒதுக்க வேண்டியிருக்கும். இந்த புதிஉயர்வு 2006ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து கணக்கிடப்படும்போது, ரூ.18 ஆயிரத்து 60 கோடியை அரசமேலும் வழங்க வேண்டும்.

6-வது ஊதியக் குழுவின் அறிக்கையில் அதிக சலுகைகள், ஊதிய உயர்வு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும், இவையே இறுதி கிடையாது. இந்த அறிக்கை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக தாக்கல்

செய்யப்படும். அதன் மீதான விவாதத்தின்போது மாற்றங்கள் செய்யப்பட்டலாம்.

ஊதிய உயர்வு எவ்வளவு?

பிபி-1 குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,660 (முன்பு ரூ.4,860)

பிபி-2 குறைந்தபட்ச ஊதியம் ரூ.12,000 (8,700)

பிபி-3 குறைந்தபட்ச ஊதியம் ரூ.21,000 (15,600)

பிபி-4 குறைந்தபட்ச ஊதியம் ரூ.48,200 (39,200)

வீட்டு வாடகை படி (எச்.ஆர்.ஏ.) உயர்வு விகிதம்:

ஏ-1 நகரங்கள் - மாற்றம் இல்லை.

ஏ, பி-1, பி-2 நகரங்கள் - 20 விழுக்காட

சி நகரங்கள் - 10 விழுக்காட

அறிக்கையின் சிறப்பம்சங்கள்:

1)ஒப்பந்த அடிப்படையிலான பதவிகளுக்கு உயர்ந்த தகுதி அவசியம்.

2)ஓய்வு பெறும் வயது தொடர்ந்து 60 ஆகவே இருக்கும்.

3)மொத்த உள்ள படிநிலைகள் 35 லிருந்து 20 ஆக குறைப்பு.

4)துவக்கநிலை ஊழியர்களுக்கு 77 விழுக்காடு ஊதிய உயர்வு.

5)போனஸ் திட்டம் 'திறமைக்கு ஏற்ப ஊக்கத்தொகை' திட்டமாக மாற்றம்.

6)தலைமை காரியாலய ஊழியர்கள், சுருக்கெழுத்தாளர்களுக்கு ஜூலையில் ஆண்டு ஊதிய உயர்வு.

7)அவர்களுக்கு மொத்த ஊதியத்தில் இருந்து 2.5 விழுக்காடு ஊதிய உயர்வு.

8)ஊதிய உயர்வு 2006 ஜனவரி 1ம் தேதியில் இருந்து வழங்கப்படும்.

9)ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ். இரண்டும் தொடர்ந்து சமதகுதியாகவே கருதப்படும்.

10)அதிகாரிகளுக்கான பஞ்சப்படி மாதம் ரூ.6 ஆயிரம்.

11)பாதுகாப்பு படையினருக்கும் சமமான படிநிலை, ஊதியம்.

12)வாரத்திற்கு 5 பணிநாட்கள் என்பது தொடர்ந்து பின்பற்றப்படும்.

13)மூன்று அரசு விடுமுறை நாட்கள் மட்டுமே அனுமதி.

14)மற்ற அரசாணை விடுமுறைகளும், அவற்றுள் அடங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil