Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி!

அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி!
, ஞாயிறு, 23 மார்ச் 2008 (14:37 IST)
முழுவதும் திட எரிபொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 700 கி.மீ. முதல் 900 கி.மீ. வரை உள்ள தரை இலக்குகளைத் தாக்கவல்ல அக்னி-1 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது!

ஒரிசா கடற்பகுதியில் உள்ள வீலர் தீவிலிருந்து இன்று காலை 10.15 மணிக்கு ஏவப்பட்ட அக்னி-1 ஏவுகணை துல்லியமாக இலக்கை தாக்கி அழித்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (DRDO) கூறியுள்ளது.

15 மீட்டர் நீளமும், 12,000 கிலோ எடையும் கொண்ட இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட அக்னி-1 ஏவுகணை, 1,000 கிலோ எடை கொண்ட அணு ஆயுதத்தை தாங்கிச் சென்று தாக்கவல்லது.

இன்று சோதிக்கப்பட்ட அக்னி-1 ஏவுகணை, முழுவதும் திட எரிபொருளைக் கொண்டு ஏவப்படும் முதல் ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil