புத்த மதத் தலைவர் தலாய் லாமாவை அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவர் பெலோசி சந்திப் பேசியதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன், " அவர்களின் சந்திப்பு (தலாய் லாமா- பெலோசி) சீனாவிற்கு எதிரான சந்திப்பாக அமைந்துவிடாதபடி அரசு கண்காணிக்க வேண்டும்" என்றார்.
திபெத் விவகாரம் சீனாவின் உள்விவகாரம் என்று கூறிய பரதன், "ஒவ்வொரு நாட்டிலும் சூழ்நிலை மாறும்போது விவகாரங்கள் எழுவது சகஜம். அந்த உள்விவகாரங்களில் மற்றவர்கள் தலையிடாமல் இருப்பது அவசியம்" என்றார்.