Publish Date: Thu, 20 Mar 2008 (18:08 IST)
Updated Date: Thu, 20 Mar 2008 (18:08 IST)
கர்நாடகத்தில் மே மாத இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
புது டெல்லியில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி தலைமையில் கூடிய தேர்தல் ஆணைக் கூட்டத்தில், கர்நாடகத்தில் மே 28 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி முற்றுப் பெறுவதற்குள் சட்டப் பேரவைத் தேர்தலை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மறுசீரமைப்புச் செய்யப்பட்டுள்ள தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்த தேர்தல் ஆணைய வட்டாரங்கள், தேர்தல் அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்றன.