மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா புகை பிடிப்பதை கைவிட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"புத்ததேவ் ஒரு தலைவர், தலைவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். மூத்த மனிதரான அவருக்கு புகை பிடிப்பதை கைவிட வேண்டும் என்ற என்னுடைய அறிவுரை தேவையில்லை" என்றார் அவர்.௦
மேற்கு வங்கத்தில் 70.2 விழுக்காடு ஆண்கள் புகையிலை தயாரிப்புகளை உபயோகிப்பதாகவும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில்தான் புகை பிடிப்பவர்கள் அதிக அளவில் உள்ளதாகவும் அன்பு மணி கூறினார்.
முன்னதாக புத்ததேவ் பட்டாச்சார்யா, கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னால் புகை பிடிப்பதை நிறுத்த முடியாது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.