Publish Date: Wed, 19 Mar 2008 (21:20 IST)
Updated Date: Wed, 19 Mar 2008 (21:20 IST)
ஸ்ரீநகரில் உள்ள ஜஹாங்கீர் விடுதியில் இன்று நடந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 15 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விடுதி நெரிசல் மிகுந்த ஜஹாங்கீர் செளக் பகுதியில் அமைந்துள்ளது. இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்த குண்டுவெடிப்பிற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.