விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக தேசிய அளவிலான கொள்கையை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றிற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் மணிசங்கர் ஐயர் அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்தார்.
தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகளை நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் சீரமைக்க இந்தக் கொள்கை உதவுவதுடன், ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் குறிப்பிட்ட கூட்டமைப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரத்தையும் விளையாட்டுத் துறை அமைச்சகத்திற்கு வழங்கும் என்றார் அவர்.