பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட நீர் பங்கீட்டு ஒப்பந்தம் படி கேரள மாநில நீர்பாசனத்திற்கு தேவையான நீர் பங்கீட்டில் தமிழக அரசு நடந்து கொள்ளும் நிலை ஏற்புடையதாக இல்லை என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் இன்று தெரிவித்துள்ளார்.
கேரள சட்டசபையில் இன்று அவர் அளித்த பதிலில், கடந்த 1972ம் ஆண்டு முதல் மூன்று முறை மட்டுமே அணையின் முழு கொள்ளளவான 2,663 அடியை பிப்ரவரி 1ம் தேதி தமிழக அரசு தேக்கி வைத்துள்ளதாக கூறினார்.
இதனால் கோடைகாலத்தில் போதுமான தண்ணீரை வழங்க இயலாத நிலை கேரளாவுக்கு உருவாகி உள்ளது. இருந்த போதிலும் தமிழக அரசு மழைக்காலத்தில் உபரி நீரை திறந்து விட்டு கேரளாவுக்கான பங்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக கூறிவருகிறது. இந்த பிரச்சனையை கேரள அரசு பலமுறை எழுப்பியுள்ளது என்றார்.