Publish Date: Wed, 19 Mar 2008 (12:07 IST)
Updated Date: Wed, 19 Mar 2008 (12:06 IST)
உடல் நலமின்றி புது டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியை மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு முதலமைச்சர் கருணாநிதி சார்பில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி நெஞ்சுவலி காரணமாக புது டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார். அப்போது அவர் விரைவில் குணமடைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி சார்பில் வாழ்த்து தெரிவித்தார்.