நமது நாட்டில் 76 கல்வி நிறுவனங்களில் அங்கீகாரமில்லாத அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் தொழில்நுட்பப் படிப்புகள் வழங்கப்படுகின்றன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அங்கீகாரமில்லாத படிப்புகளை வழங்கும் போலிக் கல்வி நிறுவனங்களில் பட்டியல் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் (AICTE) இணை தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் முகவரி: www.aicte.ernet.in.
மாநிலங்களவையில் இன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் புரந்தேஸ்வரி கேள்வி ஒன்றிற்கு எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் இத்தகவலைத் தெரிவித்தார்.
போலியான கல்வி நிறுவனங்கள் குறித்து மாணவர்களை எச்சரிப்பதற்காக அந்நிறுவனங்களின் பட்டியலை அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் முன்னணி பத்திரிகைகளில் வெளியிட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.