Publish Date: Sat, 15 Mar 2008 (18:07 IST)
Updated Date: Sat, 15 Mar 2008 (18:06 IST)
அஸ்ஸாமில் வடக்கு லகிம்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன் ஒருவர் காயமடைந்தார்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகள் உல்ஃபா அல்லது என்.டி.எஃப்.பி. இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதுவதாக பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளனர்.
லகிம்பூர் மாவட்டம் நாராயண்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிலிகாகுரி சபோரி வனப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளைச் சுற்றிவளைத்த போது காலை 4.30 மணியளவில் இந்த மோதல் நடந்துள்ளது.
காயமடைந்த தீவிரவாதி தன்னிடம் இருந்த ஏ.கே.47 துப்பாக்கியுடன் தப்பி ஓடிவிட்டதாகவும், அவனைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.