Publish Date: Fri, 14 Mar 2008 (20:47 IST)
Updated Date: Fri, 14 Mar 2008 (20:46 IST)
நந்திகிராம் வன்முறைகள் தொடர்பாக அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையில் கூறியுள்ளவற்றுக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. பேச்சாளர் விஜய் குமார் மல்ஹோத்ரா, இந்தியாவின் உள் விவகாரங்களில் கருத்துத் தெரிவிக்க அமெரிக்காவிற்கு உரிமையில்லை என்றார்.
அதேநேரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் கடுமையாக விமர்சித்த மல்ஹோத்ரா, நந்திகிராமில் வன்முறைகளும் கொலைகளும் நடந்து ஒரு ஆண்டிற்கு மேலாகிவிட்ட நிலையில், தற்போதும் அங்குள்ள அப்பாவி விவசாயிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்று குற்றம்சாற்றினார்.
Webdunia
Publish Date: Fri, 14 Mar 2008 (20:47 IST)
Updated Date: Fri, 14 Mar 2008 (20:46 IST)