Publish Date: Thu, 13 Mar 2008 (13:17 IST)
Updated Date: Thu, 13 Mar 2008 (13:03 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று இரவு இரண்டு பெண்கள் உள்பட தலித் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் முகமூடி மனிதர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஈடாவா மாவட்டத்தில், அமீன்பத் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்த முகமூடி கும்பல் அந்த குடும்பத்தினர் மீது கண்மூடித்தனமாக சரமாரியாக சுட்டனர். இந்த நிகழ்வில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
இந்த தாக்குதலில் இருந்து தப்பிய ஐந்து வயது சிறுமி, வந்தவர்கள் தங்களது முகங்களை துணியால் மூடியிருந்ததாக காவல்துறையினரிடம் கூறினாள்.
இந்த கொலை நிகழ்வு நிலத்தகராறு பிரச்சினை காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்றும் அந்த கும்பலை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Webdunia
Publish Date: Thu, 13 Mar 2008 (13:17 IST)
Updated Date: Thu, 13 Mar 2008 (13:03 IST)