கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் மதியம் 1 மணி வரை தள்ளி வைக்கப்பட்டது.
மக்களவை இன்று காலை கூடியதும், கண்ணணூரில் பாதுகாப்பு பணிகளை ராணுவம் ஏற்க கூடாது என்று என்று கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஏற்புடையது அல்ல என்று கூறி பா.ஜ.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அமைதி காக்கும்படி கூறினார்.
ஆனால் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையை மதியம் 1 மணி வரை தள்ளி வைப்பதாக சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அறிவித்தார்.
இதேபோல் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மதியம் 1 மணி வரை அவை தள்ளி வைக்கப்பட்டது.