Publish Date: Tue, 11 Mar 2008 (16:12 IST)
Updated Date: Tue, 11 Mar 2008 (16:12 IST)
பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் இயங்கிவரும் நக்சலைட்டுகளுக்கும் நேபாளத்தில் இயங்கிவரும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் தொடர்பில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இத்தகவலைத் தெரிவித்தார்.
நக்சலைட்டுகள் தங்களுக்கு சட்ட விரோதமாக ஆயுதங்கள், வெடிபொருட்கள் வாங்குவதற்கு கடந்த 2007- 08 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.60 கோடி வரை செலவிட்டுள்ளனர் என்ற தகவலை பாட்டீல் உறுதி செய்தார்.
ஜார்கண்டில் கைது செய்யப்பட்டுள்ள சில நக்சலைட்டுகளிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த விவரங்கள் தெரிய வந்ததாக அவர் கூறினார்.
Webdunia
Publish Date: Tue, 11 Mar 2008 (16:12 IST)
Updated Date: Tue, 11 Mar 2008 (16:12 IST)