Publish Date: Sun, 09 Mar 2008 (15:27 IST)
Updated Date: Sun, 09 Mar 2008 (15:26 IST)
ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
கிஸ்த்வார் மாவட்டத்தில் உள்ள குன்ச்சால் பகுதியில் பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின் போது இச்சம்பவம் நடந்துள்ளது.
கொல்லப்பட்ட தீவிரவாதியின் பெயர் காசிம் குஜ்ஜார் என்ற பாபர் என்று தெரியவந்துள்ளது. அவனிடமிருந்து கைத்துப்பாக்கி, கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையில், ரியாசி மாவட்டம், அர்னாஸ் காவல் நிலையத்தில் அன்சார் அகமது, மும்தாஜ் ஆகிய இரண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர்.