சபரிமலை அய்யப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை மூன்று நீதிபதிகள் விசாரிப்பார்கள்.
புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது பெண்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் என்பதால் தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு எஸ்.பி.சின்ஹா தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இதில் கேரள அரசு, மனுதாரர் ஆகியோரின் வாதங்களைக் கேட்ட பிறகு, இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணைக்குப் பரிந்துரைப்பதாக நீதிபதி எஸ்.பி.சின்ஹா கூறினார்.