Publish Date: Tue, 04 Mar 2008 (18:35 IST)
Updated Date: Tue, 04 Mar 2008 (18:35 IST)
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்ட வழக்கில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வாக்குமூலத்தைக் கண்டித்து வி.ஹெச்.பி.அமைப்பு நாடு தழுவிய போராட்டத்தைத் துவங்கியுள்ளது.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்ட வழக்கில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வாக்குமூலத்தில், ராமர் பாலம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளது.
இதைக் கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் இன்று காலை நாடாளுமன்றம் நோக்கி மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.ஹெச்.பி. செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால், இதுபோன்ற வாகன பேரணி உள்ளிட்டப் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெறும் என தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Tue, 04 Mar 2008 (18:35 IST)
Updated Date: Tue, 04 Mar 2008 (18:35 IST)