Publish Date: Tue, 04 Mar 2008 (11:26 IST)
Updated Date: Tue, 04 Mar 2008 (11:26 IST)
மகா சிவராத்திரியை முன்னிட்டு மாநிலங்களவைக்கு வரும் வியாழக்கிழமை முதல் 4 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்கள் சிவராத்திரிக்காக விடுமுறை அளிக்கப்படுகிறது. சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் வார விடுமுறை தினங்கள். வரும் திங்கள்கிழமை மீண்டும் அவை கூடும் என்று மாநிலங்களவை துணைத் தலைவர் கே. ரகுமான் கான் அறிவித்தார்.
மாநிலங்களவையின் இந்தக் கூட்டத் தொடரில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் பொது பட்ஜெட், ரயில்வே பட்ஜெட்கள் மீதான விவாதங்களும் நடைபெற வேண்டும்.
Webdunia
Publish Date: Tue, 04 Mar 2008 (11:26 IST)
Updated Date: Tue, 04 Mar 2008 (11:26 IST)