Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ம‌க்களவை ‌கே‌ளி‌க்கை‌க் கூடமா‌கி‌வி‌ட்டது: சோ‌ம்நா‌த் சா‌ட்ட‌ர்‌ஜி!

ம‌க்களவை ‌கே‌ளி‌க்கை‌க் கூடமா‌கி‌வி‌ட்டது: சோ‌ம்நா‌த் சா‌ட்ட‌ர்‌ஜி!
, திங்கள், 3 மார்ச் 2008 (20:39 IST)
மக்களவை கே‌ளி‌‌்கைக் கூடமாகிவிட்டது என்று மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, வேதனையுடன் கூறினார்.

ம‌க்களவை‌யி‌லஇ‌ன்று ‌சி‌வ்சேனஉறு‌ப்‌பின‌ர் அனந்த கிடே பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறு‌ப்‌பின‌ர்களு‌மமுழ‌க்க‌மி‌ட்டன‌ர். அமைதி காக்குமாறு பலமுறை கேட்டுக் கொண்டபிறகும், உறு‌ப்‌பின‌ர்க‌ளதங்கள் விருப்பப்படி பேசிக் கொண்டிருந்ததால் கோபம் அடைந்த சோம்நாத் சாட்டர்ஜி, அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்தார். ஜனநாயக மரபுகளைக் காக்க வேண்டிய மக்களவை, கே‌ளி‌க்கை‌க் கூடமாகிவிட்டது என்று அப்போது அவர் கூறினார்.

"அவைத் தலைவராக என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். ஆனால் என் பணியை செய்ய முடியவில்லை. நான் சொல்வதை கேட்க யாரும் தயாராக இல்லை. என் அனுமதியில்லாமல் யாரும் எந்த பிரச்சனையையும் இங்கு பேசக் கூடாது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எதையும் பேசி அவைத் தலைவருக்கு உத்தரவிட முடியாது. அவைத் தலைவர் பதவியில் இருந்து விலக விரும்புகிறேன்" என்று வேதனையுடன் பேசினார் சோம்நாத் சாட்டர்ஜி.

மக்களவை மீண்டும் கூடியதும் சி‌வ்சேனஉறு‌ப்‌பின‌ரி‌னபேச்சை, அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக சோம்நாத் சாட்டர்ஜி உத்தரவிட்டார்.

விவசாயிகள் பயிர்க்கடனை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சி உறு‌ப்‌பின‌ர்க‌ள் கடந்த வாரம் மக்களவையில் அமளியில் ஈடுபட்டபோது, "ஜனநாயகத்தை ஒழிக்க நீங்கள் கூடுதலாக வேலை செய்கிறீர்கள். நீங்கள் இங்கு நல்ல முறையில் பணியாற்றவில்லை" என்று அப்போதும் வருத்தத்துடன் கூறினார் சோம்நாத் சாட்டர்ஜி.

Share this Story:

Follow Webdunia tamil