பாகிஸ்தானில் புதிய அரசு முறைப்படி பதவியேற்றதும், அந்நாட்டுடனான அமைதிப் பேச்சுக்களை மீண்டும் துவங்க இந்தியா தயாராக உள்ளது என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
மக்களவையில் இன்று அயலறவுக் கொள்கை தொடர்பாக அமைச்சர் பிரணாப் முகர்ஜி வாசித்த அறிக்கையில், பாகிஸ்தான் மக்கள் தங்களின் விருப்பங்களை ஜனநாயகமான முறையில் மிகத் தெளிவாகத் தேர்தல் மூலம் வெளிப்படுத்தி விட்டனர் என்றதுடன், இருநாடுகளும் தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை அமைதியான பேச்சுகள் மூலமாகத் தீர்த்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இன்னமும் இந்தியாவிற்கு உள்ளது என்றும் கூறினார்.
"பயங்கரவாதம், வன்முறைகள் இல்லாத சூழலில் பாகிஸ்தானுடன் இருதரப்பிற்கும் பயனளிக்கும் வகையிலான நல்லுறவுகளைக் கட்டமுடியும் என்ற நம்பிக்கை இந்தியாவிற்கு உள்ளது" என்றார் அவர்.