மேகாலயா மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது.
காலை 7.00 மணிக்குத் துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வாக்குச்சாவடிகளில் பெண்களும், ஆண்களும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இதுவரை குறிப்பிடத்தக்க வகையில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை.
வாக்குச்சாவடிகளிலும், குறிப்பாக பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியின் பதவி காலம் முடிவதை அடுத்து அம்மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில், ஒரு தொகுதி வேட்பாளர் இறந்ததை அடுத்து 59 தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடக்கிறது.
தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய கூடுதல் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.