Publish Date: Fri, 29 Feb 2008 (16:59 IST)
Updated Date: Fri, 29 Feb 2008 (16:58 IST)
"மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்திருப்பது, நிதிநிலை அறிக்கையல்ல; அது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அறிக்கை" என்று பா.ஜ.க. கூறியுள்ளது.
மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. துணை தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி " மத்திய நிதிநிலை அறிக்கை அடுத்த நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. இந்த அறிக்கை தேசிய முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அறிக்கையாகத்தான் அமைந்துள்ளது. கடந்த ஆண்டுகளைப்போல இந்த வாக்குறுதிகளும் செயல்படுத்தப்படாது என்பதை பொதுமக்கள் நன்கு அறிவார்கள்" என்றார்.
Webdunia
Publish Date: Fri, 29 Feb 2008 (16:59 IST)
Updated Date: Fri, 29 Feb 2008 (16:58 IST)