Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு ஊ‌ழிய‌ர் இற‌ந்தா‌ல் வா‌ரிசு‌க்கு கருணை அடி‌ப்படை‌யி‌ல் வேலை இ‌ல்லை: உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌‌ம்!

அரசு ஊ‌ழிய‌ர் இற‌ந்தா‌ல் வா‌ரிசு‌க்கு கருணை அடி‌ப்படை‌யி‌ல் வேலை இ‌ல்லை: உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌‌ம்!
, வியாழன், 28 பிப்ரவரி 2008 (20:52 IST)
அரசு ஊழியர் இறந்தால் கருணை அடிப்படையில் வேலை கேட்பதற்கு அவரது வாரிசுக்கு உரிமை இல்லை என உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்த விடயத்தில் இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தினரின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கலாம் எனவும் நீதிமன்றம் கூறியது.

ஆந்திரப் பிரதேச போக்குவரத்து கழத்தில் பணியாற்றிய ஒருவர் இறந்ததால் அவரது மனைவி சவருன்னிஷா பேகம், தனக்கு வேலை வழங்க வேண்டும் என போக்குவரத்துக் கழகத்திடம் கோரினார்.

ஆனால், அவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு மட்டுமே வழங்க முடியும் என போக்குவரத்துக் கழகம் கூறிவிட்டது.

இதையடுத்து தமக்கு வேலை வழங்க வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் சவருன்னிஷா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஒ‌ற்றை ‌நீ‌திப‌தி, அவருக்கு வேலை வழங்க போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டா‌ர்.

இதை எதிர்த்து உயர்நீதிமன்ற அம‌ர்‌விட‌ம் போக்குவரத்துக் கழகம் மேல் முறையீடு செய்தது. அந்த அம‌ர்வு, சவருன்னிஷாவுக்கு நடத்துனர் அல்லது உதவியாளர் பணி கொடுக்குமாறு போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் போக்குவரத்துக் கழகம் முறையிட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் பி.பி.நளலேகர், எல்.எஸ்.பாந்தா ஆகியோர் அடங்கிய அம‌ர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தனர்.

ஒரு அரசு ஊழியர் இறப்பதால் மட்டுமே அவருடைய வாரிசுக்கு வேலை கொடுத்துவிட முடியாது. அவருடைய குடும்பத்தின் நிதி நிலைமையை ஆய்வு செய்து இது குறித்து முடிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil