Publish Date: Wed, 27 Feb 2008 (10:40 IST)
Updated Date: Wed, 27 Feb 2008 (10:40 IST)
டெல்லி, நஜப்கரில் உள்ள கோபால் நகர் பகுதியில் இன்று அதிகாலை ஒரு வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் உயிருடன் எரிந்து சாம்பலாயினர். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூல்சந்த் என்பவரது நிலைமை மிகவும் கவலைகிடமாக உள்ளது. படுகாயமடைந்த மற்றொருவரின் பெயர் ரஜத் என்று தெரியவந்துள்ளது.
இன்று அதிகாலை 3.25 மணியளவில் தீயணைப்புத்துறையினருக்கு வந்த தொலைபேசியை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இரண்டு தீயணைப்பு வண்டிகளில் வந்த அவர்கள் அந்த வீட்டில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை 20 நிமிடம் போராடி அணைத்தனர்.
எனினும், இந்த தீவிபத்துக்கான காரணம் என்னவென்று சரியாக தெரியவில்லை என்றும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Webdunia
Publish Date: Wed, 27 Feb 2008 (10:40 IST)
Updated Date: Wed, 27 Feb 2008 (10:40 IST)