அணு ஆயுதத்தை தாங்கி கடலுக்கு அடியில் இருந்து இலக்கை தாக்கக் கூடிய 'கே-15' ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இந்த 'கே-15' என்ற இந்த ஏவுகணை 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை குறி வைத்து தாக்கும் வல்லமை உடையது. இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா என்ற வரிசையில் இந்தியாவும் ஐந்தாவதாக இணைந்துள்ளது.
விசாகப்பட்டினத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் கடலுக்கு அடியில் இருந்து இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டதாக பாதுகாப்பு ஆய்வு மேம்பாட்டு அமைப்பின் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி எஸ்.பிரகலதா தெரிவித்துள்ளார்.