Publish Date: Tue, 26 Feb 2008 (20:59 IST)
Updated Date: Tue, 26 Feb 2008 (20:58 IST)
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் சார்பாக தாக்கல் செய்ய வேண்டிய புதிய மனு இறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டிய வாக்குமூலம் குறித்து விவாதிப்பதற்காக நேற்றுக் கூடிய அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவையின் அரசியல் விவகாரங்கள் குழுக் கூட்டம் கூடியது.
இக்கூட்டத்தில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டிய வாக்குமூலத்தின் மீது விவாதம் நடந்ததுடன், இதை எல்லாத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மாற்றுவதற்காக சில நாட்களில் மீண்டும் கூடவும் முடிவு செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ள புதிய வாக்குமூலம், சேது சமுத்திரத் திட்டத்தின் தற்போதைய பாதையை பாதிக்காத வகையிலும், மத சார்பற்ற தன்மையுடனும் இருக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
Webdunia
Publish Date: Tue, 26 Feb 2008 (20:59 IST)
Updated Date: Tue, 26 Feb 2008 (20:58 IST)