"ஆறாவது ஊதிய ஆணையம் தனது அறிக்கையை ஏப்ரல் 4ஆம் தேதி சமர்பிக்கும்" என்று மத்திய துணை நிதியமைச்சர் பி.கே. பன்சால் கூறினார்.
அரசு ஊழியர்களின் ஊதியத்தை மாற்றி அமைப்பதற்காக 2006ஆம் ஆண்டு அக்டோபரில் 6வது ஊதிய ஆணையம் அமைக்கப்பட்டது. புதிய ஊதிய விகிதத்தை தீர்மானித்து அறிக்கை சமர்பிக்க 18 மாதங்கள் வழங்கப்பட்டன. இந்த புதிய ஊதிய விகிதத்தை அனைத்து அரசு ஊழியர்களும் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில், "வரும் ஏப்ரல் 4ஆம் தேதி புதிய ஊதிய அறிக்கை சமர்பிக்கப்படும். அவை அமல்படுத்துவதற்கான காலம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை" என்று மத்திய துணை நிதியமைச்சர் பி.கே. பன்சால் இன்று சட்டசபையில் தெரிவித்தார்.
இதுகுறித்து, பிறகு பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, "ஆட்சிப்பணித் துறை, அமைச்சர்களுக்கு அதிக ஊதிய உயர்வு இருக்கும்" என்று அவர் கூறினார்.