Publish Date: Tue, 26 Feb 2008 (16:27 IST)
Updated Date: Tue, 26 Feb 2008 (16:26 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்பு படையினர் அழித்ததுடன், அங்கிருந்து ஏராளமான வெடி பொருள்களை கைப்பற்றினர்.
பாதுகாப்பு படையினரும், காவல் துறையினரும் இணைந்து பட்காம் மாவட்டத்தில் உள்ள நந்தன்புரா என்னும் இடத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கிருந்த தீவிரவாதிகளின் மறைவிடத்தை கண்டுபிடித்து அழித்தனர். மேலும் ஒரு கைத்துப்பாக்கி, இரண்டு கையெறி குண்டுகள், 4 ஏ.கே. ரக துப்பாக்கிகள், ஒரு ரேடியோ உள்பட ஏராளமான வெடிபொருள்களையும் கைப்பற்றியதாகவும் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Webdunia
Publish Date: Tue, 26 Feb 2008 (16:27 IST)
Updated Date: Tue, 26 Feb 2008 (16:26 IST)