நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
காலையில் மக்களவையும், மாநிலங்களவையும் தொடங்கிய ஐந்து நிமிடத்திலேயே, பாரதீய ஜனதா கட்சி தலைமையில் உள்ள தேசிய ஐனநாயக கூட்டணி கட்சியைச் சேரந்த உறுப்பினர்கள் விவசாயிகளின் தற்கொலை பிரச்சனையை விவாதிக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
அவர்கள் சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் சென்று கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு விவசாயிகளின் தற்கொலை பிரச்சனையை விவாதிக்க வேண்டும், விவசாயிகளின் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும என்று கோஷம் எழுப்பினார்கள்.
இதனால் அவையில் அமளி ஏற்பட்டதால், சபையை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக அவைத் தலைவர் சோமநாத் சாட்டர்ஜி அறிவித்தார்.
இதே போல் மாநிலங்களவையிலும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் விவசாயிகளின் தற்கொலை பிரச்சனையை எழுப்பினார்கள்.
இதனால் மாநிலங்களவையும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று ரயில்வே அமைச்சர் லாலூ பிரசாத் யாதவ் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.