Publish Date: Mon, 25 Feb 2008 (20:12 IST)
Updated Date: Mon, 25 Feb 2008 (20:11 IST)
இந்த ஆண்டின் பட்ஜெட்டில் விவசாயிகள் நலன்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் இன்று புது டெல்லியில் உள்ள தனது வீட்டில், பஞ்சாப்பில் இருந்து வந்திருந்த விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பட்ஜெட் இன்னும் ஓரிரு நாட்களில் தாக்கல் செய்யப்பட இருப்பதால் அதில் உள்ள விவரங்களை நான் கூற இயலாது. ஆனால், திருமதி சோனியா காந்தி தலைமையிலான மத்திய அரசு நிச்சயமான விவசாயிகள் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்" என்றார்.
Webdunia
Publish Date: Mon, 25 Feb 2008 (20:12 IST)
Updated Date: Mon, 25 Feb 2008 (20:11 IST)