இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மும்பை பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்திருக்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக வரும் 29ம் தேதி மும்பை செல்கிறார்.
மும்பை வரும் அவர் மும்பை பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்தை திறந்து வைக்கிறார். பின்னர், கலினா வளாகத்தில் எஸ்.எம்.ரேடியோ சமுதாய திட்டத்தையும் தொடங்கி வைக்க இருப்பதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் பின்னர், முதல் பெண் குடியரசுத் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மரியாதை தெரிவிக்கும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் மும்பை பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.