பாதுகாப்பு நிறைந்த ஸ்ரீநகர் நீதிமன்ற வளாகத்தில் இன்று நிகழ்ந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் காவல்துறை அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார்.
ஸ்ரீநகர் நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர் தங்கள் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் ஆவணங்களைப் பாதுகாப்பதற்காகத் தனி அறை உள்ளது. இந்த அறையின் காவலர் முகமது ஷெரீஃப், வழக்கு ஒன்றில் குற்றவாளிக்கு எதிராக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய சில பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை எடுப்பதற்கு முயன்றபோது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் முகமது ஷெரீஃப் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். குண்டு வெடித்தவுடன் வெடிபொருட்கள் பாதுகாப்பு அறை தீப்பிடித்ததாகவும், சத்தம் கேட்டு வழக்கறிஞர்களும் பொதுமக்களும் அலறியடித்து ஓடியதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.