நமது நாட்டில் மழைக் காலங்களில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 11 ஆவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் ரூ.8,000 ஆயிரம் கோடியை ஒதுக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் மழை, வெள்ளத்தால் சேதம் ஏற்படுகிறது. இதை ஈடுகட்ட மத்திய அரசு நிவாரணம் வழங்குகிறது. இதன்படி அடுத்து வரவிருக்கும் 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.8,000 கோடியை ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தின்படி, ஆறுகளில் வெள்ளப் பெருக்கைத் தடுக்கவும், வடிகால் வசதியை மேம்படுத்தவும், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்யவும் மாநில அரசுகளுக்கு தேவையான உதவியை மத்திய அரசு செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கங்கை, பிரம்ம புத்திரா ஆறுகளில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்ட பணிகளும் நிறைவேற்றப்படும் என்றும் அவர்கள் கூறினர்.