Publish Date: Tue, 19 Feb 2008 (20:56 IST)
Updated Date: Tue, 19 Feb 2008 (20:50 IST)
செர்பியாவிலிருந்து பிரிந்து சுதந்திர நாடாக பிரகடணம் செய்துள்ள கொசோவோவை அங்கீகரிப்பது குறித்து இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அயலுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அயலுறவு அமைச்சக அதிகாரி ஒருவர், “கொசோவோ சுதந்திர நாடாக பிரகடணம் செய்துள்ளதை கவனத்தில் கொண்டுள்ளோம். இப்பிரகடணம் தொடர்பான சட்ட ரீதியான பிரச்சனைகள் பல உள்ளன. அங்கு உருவாகிவரும் சூழ்நிலையை ஆராய்ந்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
“ஒரு நாட்டின் இறைமையும், அதன் எல்லைகளுக்குட்பட்ட பூகோள ஒற்றுமையும் மற்ற நாடுகளால் மதிக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் தொடர்ந்த சீரான நிலைப்பாடு. கொசோவோ பிரச்சனைக்கு ஆலோசனை மூலமும், பேச்சு வார்த்தையின் வாயிலாகவும் தீர்வு காண்ப்பட்டிருக்க வேண்டும்” என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இந்திய அயலுறவு அதிகாரி தெரிவித்துள்ள இக்கருத்து, கொசோவோ பிரகடணத்தை எதிர்க்கும் நாடுகளின் நிலையை ஒத்ததாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொசோவோ சுதந்திர பிரகடணத்தை செல்லத்தக்கதல்ல என்று ஐ.நா. அறிவிக்க வேண்டும் என்று ரஷ்யா கூறியுள்ளது. இதே கருத்தை சீனாவும் பிரதிபலித்துள்ளது.
Webdunia
Publish Date: Tue, 19 Feb 2008 (20:56 IST)
Updated Date: Tue, 19 Feb 2008 (20:50 IST)