Publish Date: Tue, 19 Feb 2008 (20:51 IST)
Updated Date: Tue, 19 Feb 2008 (20:19 IST)
பீகார்- நேபாள எல்லையில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் 4 கிலோ கடத்தல் யுரேனியம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாகப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
பீகார் மாநிலத்தின் சுபால் மாவட்டத்தில் உள்ள பிர்புர் நகரப் பேருந்து நிலையத்தில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் 4 கிலோ கடத்தல் யுரேனியம் மீட்கப்பட்டதாக காவல் துறைக் கண்காணிப்பாளர் ஷியாம் குமார் தெரிவித்தார்.
யுரேனியத்தைக் கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அதில் ஒருவர் நமது நாட்டின் பாதுகாப்புப் படை வீரர் என்றும் தெரிவித்த ஷியாம் குமார், கடத்தல் யுரேனியம் ஆய்விற்காக சோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இது குறித்து மேல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும், அது முடிந்த பிறகே மற்ற விவரங்களைத் தெரிவிக்க முடியும் என்றும் ஷியாம் குமார் கூறினார்.