Publish Date: Tue, 19 Feb 2008 (17:30 IST)
Updated Date: Tue, 19 Feb 2008 (17:30 IST)
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2004ம் ஆண்டு முதல் 266 பேர் எய்ட்ஸ்க்கு பலியாகியுள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஆனந்த் குமார் சிங் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த 2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு ஜுலை வரை எய்ட்ஸ் நோய்க்கு 266 பேர் பலியாகியுள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும், அனைவரிடமும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அவர்
கூறினார்.