ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 5 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜாம்ஷெட்பூர் மாவட்டம், பைபார்மடா கிராமத்தில் இன்று காலை 8 மணிக்கு, தேடுதல் வேட்டை நடத்திய மத்திய ரிசர்வ் காவல் படையினர் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து காவலர்கள் நடத்திய எதிர்த்தாக்குதலில் 2 பெண்கள் உட்பட 5 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.