நாடாளுமன்ற நிதிநிலைக் கூட்டத் தொடர் வரும் 25 ஆம் தேதி கூடுகிறது.
நாடாளுமன்றத்தின் நிதிநிலைக் கூட்டத் தொடரின் முதல் நாளான வரும் 25 ஆம் தேதி காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடையே உரையாற்றுகின்றார். இதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதி இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் 2008-09 ஆம் ஆண்டுக்கான இரயில்வே நிதிநிலை அறிக்கையை அவையில் தாக்கல் செய்கிறார்.
அவரைத் தொடர்ந்து நிதியமைச்சர் ப.சிதம்பரம் 2008-09 ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை வரும் 29 ஆம் தேதி தாக்கல் செய்கிறார். மூன்று மாதம் நடைப்பெறும் இந்தக் கூட்டத் தொடர் மொத்தம் 35 நாட்கள் நடைபெறுகிறது. மார்ச் 21 முதல் ஏப்ரல் 14 வரை அவை நடைப்பெறாது என்றும், இஙககூட்டத் தொடர் மே 9 -ந் தேதி வரை நடைப்பெறவுள்ளது என்று அரசு அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.