இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தினால் மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்று ஃபார்வர்ட் பிளாக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் அகில இந்தியச் செயலர் பிஸ்வாஸ் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இதை மீறிச் செயல்பட்டால் மத்திய அரசுக்கு நாங்கள் அளித்துவரும் ஆதரவைத் திரும்பப் பெறுவோம்" என்றார்.
மேலும், "மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டு ஆட்சி முதலாளித்துவ ஆட்சி போல் நடக்கிறது. அயல்நாட்டு நிறுவனங்களுக்காக விளைநிலங்களை கையகப்படுத்தப் பார்க்கிறார்கள். சிறப்பு பொருளாதார மண்டலம் அமைய ஒரு அங்குல விளைநிலத்தை கூட விட்டுத்தர மாட்டோம். இதில் இடதுசாரிகளுடன் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம்" என்றும் அவர் கூறினார்.