நேபாளத்தில் பிடிபட்ட சிறுநீரகத் திருட்டுக் கும்பல் தலைவன் மருத்துவர் அமீத் குமாரை விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
இது குறித்து டெல்லியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே குற்றவாளிகளை பரஸ்பரம் நாடுகடத்தும் உடன்பாடு இல்லை. எனினும் இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு நிலவி வருவதால், தேவைப்படும் குற்றவாளிகளை உடன்பாடு இன்றியே பரஸ்பரம் ஒப்படைக்க இயலும். அந்த வகையில் நேபாளத்தில் பிடிபட்ட மருத்துவர் அமித் குமாரை விரைவில் இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
"அமித் குமாரை இந்தியா கொண்டு வருவதற்காக ஹரியானா காவல் அதிகாரிகளும், மத்தியப் புலனாய்வுக் கழக அதிகாரிகளும் விரைவில் நேபாளத்திற்குச் செல்லவிருக்கின்றனர்" என்றும் அவர் தெரிவித்தார்.